இந்திய ரயில்வே விதிகளின் படி ரயில் நிலையத்திற்கு செல்லும் போது நடைமேடை டிக்கெட் எடுக்க வேண்டும். பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் சென்றால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படும். நீங்கள் ரயிலில் உறவினர்கள் நல்லது நண்பர்களை ஏற்றி விடுவதற்காக செல்லும்போது அல்லது யாரையாவது அழைத்து வருவதற்காக செல்லும் போது கட்டாயமாக பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க வேண்டும். இந்த டிக்கெட்டுகளுக்கு ரூ. 10 முதல் ரூ. 50 வரை கட்டணம் வசூலிக்கப்படும். அதன் பிறகு பிளாட்பார்ம் டிக்கெட்டை வைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் ரயில் நிலையத்தில் நிற்க முடியாது.

அதாவது நீங்கள் டிக்கெட் எடுத்த நேரத்தில் இருந்து அடுத்த 2 மணி நேரத்திற்கு மட்டுமே பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் செல்லுபடி ஆகும். ஒருவேளை நீங்கள் பிளாட்பார்ம் டிக்கெட்டை எடுக்கவில்லை என்றால் 250 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். இதேபோன்று பிளாட்பார்ம் டிக்கெட் மற்றும் பயண டிக்கெட் இல்லாமல் ஒரு பயணி பிடிபட்டால் அவரிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் சில அரசு துறைகளில் பணியாற்றும் நபர்களுக்கு மட்டும் இலவச ரயில்வே பிளாட்பார்ம் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த இலவச ரயில்வே பிளாட்பாரம் பாஸ் வைத்திருப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்க படாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.