ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர்.

முதலமைச்சரும், அமைச்சர் உதயநிதியும் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முகாமிட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இடைத்தேர்தல் நடக்கும் ஈரோட்டில் மட்டும் சாலைகளில் பேட்ச் ஒர்க் ஏன் நடக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், இடைத்தேர்தலில் திமுக என்ன செய்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார்.