
பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள மாயாபுரி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்வில், DJ இசையை நிறுத்துவதைக் கேட்டதிலிருந்து துவங்கிய தகராறு, பெரிய மோதலாக மாறியுள்ளது. மணமகன் தருண், மணமகளின் சகோதரர் ரோஹித்தை கடினமான வளையலால் தலையில் தாக்கியதால் அவர் காயமடைந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திலிருந்த மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் ஓடிவிட்டதாகவும், ரோஹித் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சம்பவத்துக்குப் பிறகு, இரவு முழுவதும் இரு தரப்பினரும் பஞ்சாயத்தில் கலந்துகொண்டனர். இதில், மணமகள் ராதிகா, “மணமகன் மன்னிப்பு கேட்டால்தான் திருமணம் நடைபெறும்” என கூறினார். ஆனால், தருண் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதால், ராதிகா திருமணத்தை எழுதியதோடு நேரடியாக நங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது சகோதரர் மீது தாக்குதல், வரதட்சணை கேட்டல் போன்றவைகளை தன் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், மணமகன் தருண், மற்றும் அவரது நண்பர்கள் தர்மேந்திரா, கமல், அருண், ராகுல் உள்ளிட்ட ஐந்து பேருடன் அடையாளம் தெரியாத சிலர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.