தமிழ் சினிமாவின் இயக்குனர் செல்வராகவன், தனது தனித்துவமான கதைகளால் ரசிகர்களை கவர்ந்தவர். ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், ‘காதல் கொண்டேன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘புதுப்பேட்டை’ போன்ற பல சிறப்பான படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்து, பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

“காதல் தோல்வியோ, மனைவியுடன் சிக்கலோ, வேலையில் பிரச்னையோ எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்; இவ்வுலகம் ஏறி மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல்சொல்லாது; செருப்பை போட்டுக் கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள்” என்று செல்வராகவன் கூறியுள்ளார். வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டியாக இந்த வார்த்தைகள் அமைந்துள்ளன.

தொடர்ந்து தோல்விகள் நேரிடும் போது, நம்மை நாமே தேற்றிக்கொண்டு மீண்டும் புதிய துவக்கத்தை எடுக்க வேண்டும் என்பதை செல்வராகவன் இந்த கருத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.