
மும்பையில் 25 வயதான வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஐஐடி கல்லூரியில் படிக்கிறார். கடந்த ஜூலை மாதம் இவருடைய மொபைல் நம்பருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசியவர், தன்னை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அதோடு இந்த மொபைல் நம்பரை பயன்படுத்தி, 17 சட்ட விரோத சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இந்த வழக்கு சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அதன் பின், அந்த மாணவரின் வாட்ஸ்அப் நம்பருக்கு வீடியோ கால் செய்துள்ளார். அதில் ஒருவர் காவல்துறை அதிகாரி போல் உடை அணிந்து, மாணவனின் ஆதார் நம்பரை கேட்டு வாங்கியுள்ளார். இதையடுத்து மாணவர் மீது பண மோசடி வழக்கு உள்ளது என்று கூறி 29,500 ரூபாய் அனுப்ப வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார். இதற்கிடையில் காவல்துறை அதிகாரி போல் நடித்தவர், மாணவரிடம் உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம், நீங்கள் இனிமேல் யாரிடமும் பேசக்கூடாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு மறுநாளும் அழைப்பு வந்துள்ளது. அப்போது அந்த கும்பல் அவரிடம் இருந்து வங்கி கணக்கு விவரங்களை பெற்றுக் கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து 7 லட்சம் ரூபாய் எடுத்துப்பட்டள்ளது. இதுகுறித்து மாணவன் விசாரித்த போது, அவர் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.