
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. நடிகை குஷ்பூ திருமணத்திற்காக மதமாற்றம் செய்யப்பட்டதாக அண்மையில் இணையத்தில் தகவல்கள் பரவியது. இந்நிலையில் நடிகை குஷ்பூ தற்போது தன்னுடைய twitter பக்கத்தில் மதம் மாறியதாக வெளியான செய்திகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் திருமணத்திற்காக மதம் மாறினேன் என்று செய்திகள் பரவுகிறது.
இப்படிப்பட்ட செய்திகளை பரப்புபவர்களுக்கு நம்முடைய நாட்டில் உள்ள சிறப்பு திருமண சட்டம் குறித்து தெரியாது என நினைக்கிறேன். நான் மதம் மாறவும் இல்லை. என்னை யாரும் மதம் மாறுமாறு கேட்டுக் கொள்ளவும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதன் மூலம் நடிகை குஷ்பூ மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
Those who question my marriage, or say I have converted to marry my husband, I say get some sense n education pls. Sad, they have never heard of ‘special marriage act’ which exists in our country. I have neither converted nor have been asked to do so. My marriage of 23 yrs is…
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) May 6, 2023