வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வதந்தி பரப்புவோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பூரில் வதந்தி பரப்பியதாக பத்திரிக்கை உரிமையாளர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொய் செய்தி பரப்பியோர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.

திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில் மூன்று பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வதந்தி பரப்புவோருக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்தார்.