அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பனாமா வந்துள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக பனாமாவுக்கான இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தியாவாசிய வசதிகளை கொண்ட ஒரு ஹோட்டலில் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக பனாமா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா, ஈரான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 300 பேர் தற்போது அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு பனாமாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஹோட்டலின் ஜன்னல் வழியாக உதவி கேட்கும்  வீடியோ வெளியாகிய நிலையில் இந்தியா தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.