தில்லி – மும்பை இடையே புதிதாக திறக்கப்பட்டுள்ள விரைவு சாலையில் ஒரு சில குறிப்பிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது மெதுவாக செல்லும் திறன் கொண்ட வாகனங்களை இந்த விரைவு  சாலையில் இயக்க முடியாது. பாதுகாப்பு கருதியும், விபத்துக்களை குறைக்கும் நோக்கத்திலும் குறைந்த வேகத்தில் இயக்கப்படும் வாகனங்களை இந்த சாலையில் இயக்க மத்திய போக்குவரத்து துறை அனுமதி மறுத்துள்ளது.

அந்தவகையில்  மூன்று சக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், டிராக்டர்கள் போன்றவற்றை இந்த விரைவு  சாலையில் இயக்க அனுமதி இல்லை. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை கழகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பொதுவாகவே விரைவு சாலைகளில் வேகம் குறைவாக இயக்கப்படும் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை. நாட்டின் எந்த ஒரு விரைவு சாலைகளுக்கும் இது பொருந்தும். இருப்பினும் விரைவு சாலை திறக்கப்பட்டவுடன் தேசிய நெடுஞ்சாலை துறை கழகம் சட்டப்படி இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.