IPL-ல் நேற்று நடந்த லீக் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி அணிகளானது மோதிக்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி அணியானது பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் கைல் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ரன்கள் அடித்து  விளாசினார். இதையடுத்து தீபக்ஹுடா 17 ரன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

பின் அதிரடி காட்டிய நிகோலஸ் பூரன் 36 ரன்கள், ஆயுஷ் படோனி 18 ரன்கள் சேர்க்க, லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு193 ரன்கள் எடுத்து குவித்தது. இதனிடையே குருணால் பாண்ட்யா 15 ரன்கள் மற்றும் கவுதம் 6 ரன்கள் உடன் ஆட்டத்தில் இருந்தனர். அதேபோல் டெல்லி சார்பில் கலீல் அகமது, சேட்டன் சகாரியா தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர். அத்துடன் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். அதன்பின் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கை நோக்கி டெல்லி அணியானது களமிறங்கியது. கடைசியில் டெல்லி அணியானது 143 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனது. இதன் வாயிலாக 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.