
பிஎஃப் என்பது அனைத்து நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களுக்கும் எதிர்காலத்தில் பணத் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசால் செயல்பட்டு வரும் ஒரு சேமிப்பு அமைப்பாகும். பிஎஃப் பெரும் உறுப்பினர்களுக்கு மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கு (EPFO) புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் பெயரில் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்ட UAN (உலகளாவிய கணக்கு எண்) செயல்படுத்துவதை உறுதி செய்யவும் அதனுடன் ஆதார் இணைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து நிறுவனங்களும் மற்றும் பணியாளர்களும் பயனடைவர் என்பதை நோக்கமாகக் கொண்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் வருகிற டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி ஆகும். அதற்குள் அனைத்து நிறுவனங்களும் இந்த செயல்முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.