கென்யாவில் குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தில் வழிபாடு செய்ய வருபவர்களிடம் பட்டினியால் உயிரிழந்தால் பரலோகத்திற்கு செல்லலாம் என மத போதகர் பால் மெக்கன்சி என்தெங்கேயின் கூறியுள்ளார். இதை நம்பி அவருடைய சீடர்கள் மலிந்தி என்ற பகுதிக்கு அருகே உள்ள ஷகஹோலா காட்டில் உண்ணாவிரதம் இருந்து இயேசு கிறிஸ்துவை வழிபட்டுள்ளனர்.

பட்டினியாக கிடந்ததால் பலர் உயிரிழந்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் அந்த பகுதியை முழுவதும் சீல் வைத்துள்ளனர். அங்கு புதைக்கப்பட்ட 47 பேரின் சடலங்களை இதுவரை காவல்துறையினர் தோண்டி எடுத்துள்ள நிலையில் இன்னும் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கென்யா மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத போதகர் மெக்கன்சி கைது செய்யப்பட்டுள்ளார்.