இன்றைய டிஜிட்டல் உலகில், சிறு குழந்தைகளிடம் மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்த சம்பவம் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்ததன் தாக்கத்தால், தன் சக மாணவன் ஒருவனிடம் விபரீதமான முறையில் அத்துமீறி நடந்துகொள்ள முயன்றுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஆசிரியர்கள், சமூக ஊடகங்களில் மாணவன் பார்த்திருந்த தகாத வீடியோக்களால் தூண்டப்பட்டே இந்தச் செயலைச் செய்துள்ளார் என்று கண்டறிந்துள்ளனர்.

ஏழு அல்லது எட்டு வயதுள்ள குழந்தைகள் இதுபோலப் பாதிக்கப்படுவது, பெற்றோரின் மேற்பார்வை இல்லாமல் மொபைல் பயன்பாட்டை அனுமதிப்பதால் வரும் விளைவுகள் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

இதனால், ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகள் தகாத டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர்.