புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நவேலி பாலத்தில் இன்று அதிகாலையில் இரண்டு கண்டெய்னர் லாரிகளும் ஒரு காரும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்ட கோர விபத்தில், காரில் பயணித்தவர்கள் உட்பட 7 பேர் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோதிய வேகத்தில் கண்டெய்னர் லாரியில் தீப்பற்றி எரியத் தொடங்கியதால், கார் மற்றும் லாரியில் இருந்தவர்களால் வெளியேற முடியவில்லை. இச்சம்பவம் குறித்த பரபரப்பான விடியோ வெளியாகி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடித் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

“>

 

மேலும், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.