தமிழ்நாட்டில் சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் அக்டோபர் 26ஆம் தேதி வேலைநிறுத்தம் நடத்தப்பட உள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50,000க்கும் மேற்பட்ட டெலிவரிமேன் பங்கேற்கவுள்ளனர்.

வேலைநிறுத்தம் காரணமாக அந்த நாளில் சிலிண்டர் விநியோகம் முடங்கிவிட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிலிண்டரை முன்பதிவு செய்ய நினைப்பவர்கள் விரைவில் முன்பதிவு செய்து சிலிண்டரை வாங்கிக் கொள்ளுங்கள்.