கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லூரில் சாப்ட்வேர் இன்ஜினியரான மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 13-ஆம் தேதி பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் அதிக சம்பளத்துடன் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் மகாலட்சுமி அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர்கள் இணையதள லிங்குகள் மற்றும் விபரங்களை அனுப்பி குறைந்த அளவில் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர்.

இதனை நம்பி மகாலட்சுமி அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 6 லட்சத்து 15 ஆயிரத்து 900 ரூபாய் அனுப்பியுள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் எண்கள், இணையதள லிங்குகள் அனைத்தும் முடங்கியதால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகாலட்சுமி கிருஷ்ணகிரி சைபர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.