பெங்களூருவில் பசவேஸ்வரநகரில், ஒரு ஆன்லைன் மளிகை டெலிவரி சம்பவம் கடும் வன்முறையால் முடிந்தது. ஜெப்டோ நிறுவனத்திற்காக பணியாற்றும் டெலிவரி நிர்வாகி விஷ்ணுவர்தன், முகவரி தவறாக இருந்ததற்காக வாடிக்கையாளரின் மைத்துனியை திட்டியதோடு, பிறகு வாடிக்கையாளர் ஷஷாங்க் எஸ் (வயது 30) என்பவரை தாக்கியதால், அவர் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நிகழ்ந்தது.

 

 

View this post on Instagram

 

A post shared by Reporter Live (@reporterliveofficial)

பாதிக்கப்பட்ட ஷஷாங்க், ஒரு தொழிலதிபராகும். அந்த நாள் காலை, Zepto ஆப்பில் பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டு, அந்த பொருட்கள் தவறான முகவரிக்குச் சென்றன. அதனாலேயே, அவரது மைத்துனி அதை சரிசெய்ய முயன்றபோது, விஷ்ணுவர்தன் கடும் வார்த்தைகளில் திட்டினார். இதைக் கண்டித்த ஷஷாங்கை, திடீரென தாக்கியதாக சிசிடிவி காட்சிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் மைத்துனியும் மற்றொரு பெண்ணும் அவரை மீட்டுள்ளனர். பிறகு வெளியாகிய புகைப்படங்களில் ஷஷாங்கின் வலது கண் வீங்கியதும், அவரது தலையில் எலும்பு முறிந்ததும் தெரியவந்தது.

இது குறித்து Zepto நிறுவனம், “சிரமத்திற்கும் வருந்துகிறோம். தொழில்முறை நடத்தை எங்களுக்குப் பெரிய முக்கியத்துவம். இது நிவர்த்தி செய்யப்படும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம்” என கூறியுள்ளது. இருப்பினும், பொதுவெளியில் தாக்குதல், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட BNS பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட டெலிவரி நிர்வாகியின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.