
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்பதற்காக CUET-PG நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் தற்போது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகின்ற ஜூன் ஐந்தாம் தேதி முதல் 20-ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மே ஐந்தாம் தேதி கடைசி தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய http://nta.ac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.