
CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தாலோ அல்லது மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டாலோ சிஎஸ்கே அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். அதேவேளை 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 அவர்களுக்குள் பெங்களூரு அணி இலக்கை அடைந்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.