18-வது ஐபிஎல் சீசன் கடந்த 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய நிலையில் நேற்று மூன்றாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

சென்னை அணியில் சிறப்பாக விளையாடிய நூர் அகமது 4 விக்கெட்டுகளும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். இதைத்தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்கிய நிலையில் ‌ 19‌.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும், கேப்டன் ருதுராஜ் 53 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்தனர்.

இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து எம்.எஸ் தோனி பெவிலியன் அனுப்பினார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் எப்போதுமே மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்தி  சென்னை வெற்றி பெற்றது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.