சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருக்கும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறும் CSK – SRH அணிகள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் ஆன்லைன் மூலமாகவும், சேப்பாக்கம் மைதானத்திலும் பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை 1500 ரூபாய் ஆகவும் அதிகபட்ச விலை 5 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை சிலர் ஆன்லைனில் வாங்கி வெளியில் அதிக விலைக்கு விற்பதால் மக்களே ஏமாந்து விடாதீர்கள்.