ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 18ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதும் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

இந்த போட்டிக்கு பிறகு சிஎஸ்கே அணியில் இருந்து எம்‌.எஸ் விடைபெற்று தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் எம்.எஸ் தோனி தன்னுடைய சொந்த ஊரான ராஞ்சிக்கு தற்போது சென்றுள்ள நிலையில் அங்கு பைக்கில் பயணம் செய்துள்ளார். மேலும் அவர் பைக்கில் சென்ற வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.