ரிசர்வ் வங்கியின் LRS (தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்புதல் திட்டம்) ஒரே மாதிரி வரம்பிற்குள் கிரெடிட் கார்டுகள் வாயிலாக வெளிநாடுகளில் ஏற்படும் செலவுகளை கொண்டு வர FEMA சட்டத்தை மாற்றுவதன் மூலம் வரி விதிப்பினை கொண்டுவரப்பட இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையானது வருகிற ஜூலை 1 தேதி முதல் அமலுக்கு வரும். மருத்துவ சிகிச்சையை தவிர்த்து இதர அனைத்துவித கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கு இனிமேல் இந்த புது நடைமுறைப்படி வரி வசூலிக்கப்படும்.

அந்நிய செலாவணி மேலாண்மை(FEMA ) திருத்த விதிகள், (திருத்தம்) விதிகள் 2023 வாயிலாக கிரெடிட் கார்டுகள் மூலம் வெளிநாடுகளில் செய்யப்படும் செலவுகளும் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் என நிதியமைச்சகம் தன் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. 2023-24 ஆம் வருடத்திற்கான பட்ஜெட்டில் வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ்கள் மற்றும் எல்ஆர்எஸ் கீழ் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணம் மீதான TCS விகிதம் 5 சதவீதத்திலிருந்து 20% ஆக உயர்த்தப்பட்டது. புது வரி விகிதம் ஜூலை 1, 2023 முதல் நடைமுறைபடுத்தப்பட இருக்கிறது.

இதுபற்றிய அறிவிப்பை அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. புது விதியின் படி ரூ.2.5 லட்சத்திற்கும் அதிக மதிப்பிலான வெளிநாட்டு நாணயத்தை அனுப்புவதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதியானது தேவைப்படும். முன்பாக வெளிநாட்டு பயணத்தின்போது ஏற்படும் செலவுகளுகுரிய சர்வதேச கிரெடிட் கார்டு கொடுப்பனவுகள் LRS-ன் வரம்பிற்குள் வரவில்லை. டெபிட் கார்டு வாயிலாக செய்யப்படும் பர்வர்த்தனைகள் ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் LRS திட்டத்தின் கீழ் இருக்கிறது. எனினும் கடன் அட்டைகள் வாயிலாக வெளிநாடுகளில் செய்யப்படும் செலவுகள் இந்த வரம்பிற்குள் கொண்டுவரப்படவில்லை.