நாடு முழுவதும் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதால் கையில் எந்த நேரமும் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அதனால் பிரச்சனைகளும் எழுகின்றன. அதாவது நிதி பரிவர்த்தனைகளை செய்ய பான் கார்டு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அது மூலம் பணம் மோசடி நடைபெறுகின்றது. வருமான வரித்துறை மூலமாக வழங்கப்படும் பான் கார்டில் உள்ள தனிப்பட்ட எண் ஒவ்வொரு குடிமகனுக்கும் வேறுபட்டது.

இந்த பான் கார்டு நகல் பல இடங்களில் தேவைப்படுவதால் நீங்கள் கொடுக்கும் பான் கார்டு யார் பயன்படுத்தினாலும் அதனை நீங்கள் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். அதாவது உங்களின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் அனைத்தும் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கலாம். நீங்கள் உங்களுடைய சிபில் ஸ்கோரையும் தொடர்ந்து சரி பார்க்க வேண்டும். சிபில் ஸ்கோரில் உங்களால் எடுக்கப்பட்ட கடன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவை பற்றிய தகவல்கள் அனைத்தும் இருக்கும். உங்களின் வருமான வரி கணக்கையும் சரிபார்க்க வேண்டும். உங்களுடைய கணக்கில் தவறான பரிவர்த்தனை இருந்தால் நீங்கள் காவல்துறையில் புகார் அளிக்கலாம். மேலும் வருமானவரித்துறையில் புகார் தெரிவித்தாலும் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.