இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி மத்திய அரசு கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயன்பெறும் விதமாக உதவித்தொகை வழங்கி வருகின்றது. அங்கன்வாடி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு இந்த உதவி தொகை திட்டத்தின் கீழ் கருவுற்றுள்ள பெண்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்ப்பதற்கு ஐந்தாயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை ஒவ்வொரு பகுதியாக பிரித்து வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

முதல் கட்டமாக கருவுற்ற பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கர்ப்ப கால சிகிச்சையின் போது 2000 ரூபாய் வழங்கப்படும். அடுத்ததாக குழந்தை பிறந்தவுடன் 2000 ரூபாய் என மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் https://pmmvy.nic.in/account/login என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.இதற்கு முதலில் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தன்னுடைய கர்ப்ப கால சிகிச்சை பதிவு செய்து வைத்திருப்பது அவசியம்.