திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியைச் சேர்ந்த கருணை என்பவர் சேரன்மகாதேவி ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் டவுன் பகுதியைச் சேர்ந்த சித்திரைப் பாண்டியன் என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த 2014- ஆம் ஆண்டு சித்திரை பாண்டியன், அருள், மாரியப்பன், கணேசன், நயினார், மற்றொரு மாரியப்பன், முருகன் ஆகியோர் இணைந்து கருணாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சித்திரை பாண்டியன் உட்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே சித்தரை பாண்டியனும், கணேசனும் இறந்துவிட்டனர். இந்நிலையில் நெல்லை 2-வது மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அருள், மாரியப்பன் ஆகிய இரண்டு பேருக்கும் தலா 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தனர். மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.