விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஆசிரியரான சோலைமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சரோஜாவின் உடன் பிறந்த தம்பி துரையரசன் அடிக்கடி தனது அக்கா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது செலவுக்கு அக்காளிடம் பணம் வாங்கி சென்றுள்ளார். இதனையடுத்து துரையரசன் மீண்டும் தனது அக்காளிடம் செலவுக்கு பணம் கேட்ட போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த துரையரசன் தனது அக்காவை கிரைண்டர் குழவியால் தாக்கி கொலை செய்தார். அதனை தடுக்க வந்த சோலைமலையையும் கல்லால் அடித்து துரையரசன் கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் துரையரசனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் துரையரசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 16,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.