கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் 23 வயது வாலிபர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு இந்த வாலிபர் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கர்ப்பமான சிறுமி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அப்போதுதான் அவருக்கு 16 வயதில் திருமணம் நடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.