தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை யாஷிகா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நடிகை யாஷிகா இசிஆர் அருகே நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.

இதில் யாஷிகாவின் தோழி ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு மார்ச் 21-ம் தேதி நடிகை யாஷிகா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேரில் விசாரணை ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் யாஷிகா விசாரணைக்கு ஆஜராகததால் அவருக்கு இன்று பிடிவாரெண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 25-ம் தேதி யாஷிகா விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்ய வாய்ப்பு உள்ளது.