நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி கொண்டாட்டம் என்பதை இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைப் போல தீபாவளி கொண்டாடும் எட்டு நாடுகள் குறித்து இதில் பார்க்கலாம்.

இந்தோனேசியாவில் இந்து மக்கள் குறைந்த அளவில் இருந்தாலும் தீபாவளி மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படும். அங்கு பட்டாசுகள், உடைகள் மற்றும் இனிப்புகள் வாங்குதல் என தமிழ்நாட்டு முறையை பின்பற்றி தீபாவளி கொண்டாடப்படும்.

மலேசியாவில் ஹரி தீபாவளி என்று அழைக்கப்படும் தீபாவளி மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும். விடியற்காலை எண்ணெய் குளியல் போட்டு கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்து ஒளிரும் தெருகளும் வீடுகளும் மின்ன பட்டாசுகள் இல்லாமல் தீபாவளி கொண்டாடப்படும்.

பிஜி நாட்டில் தீபாவளியை இந்தியாவைப் போல மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர். தங்களுடைய வீடுகளை சுத்தம் செய்கின்றன. வண்ண விளக்குகளால் வீடுகளை அழகுப்படுத்தி இறைவனை வழிபட்டு தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

நேபாளம் நாட்டில் திகார் என்று அழைக்கப்படும் தீபாவளி செல்வத்தின் தெய்வமான லட்சுமி மற்றும் கணேசனை போற்றுவதற்காக கொண்டாடப்படுகின்றது.

தென் அமெரிக்காவில் உள்ள கயானா பகுதியில் இந்தியாவைப் போல இனிப்புகள் பரிமாறி வீடுகளில் விளக்குகள் மற்றும் உறவினர்களை பார்ப்பது கோவில்களுக்கு பிரார்த்தனை செய்வது என ஆகியவற்றை செய்து தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.

இலங்கையில் அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படும் பரவலான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாகும். இலங்கை தீவு முழுவதும் பரவியுள்ள இந்து தமிழர்களால் ஐந்து நாட்கள் முழுமையாக தீபாவளி திருவிழாவை கொண்டாடுவார்கள்.

தாய்லாந்து நாட்டில் லோய் கிராதோங் என்ற பெயரில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. வானவேடிக்கை காட்சிகள் நடத்தப்பட்டு வாழை இலைகளால் செய்யப்பட்ட விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகள் அனைத்து பகுதிகளிலும் ஜொலிக்கும்.

மொரிசியஸ் நாட்டில் தீபாவளி முதன்மையான தீவின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இந்து சமூகத்தால் கொண்டாடப்படுகின்றது.