கொரோனா பயத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று ஆண்டுகளாக மகனுடன் அடைந்திருந்த பெண் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அரியானாவில் நிகழ்ந்துள்ளது. அரியானா மாநிலத்தில் கொரோனாவிற்கு பயந்து அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று ஆண்டுகளாக அடைந்திருந்த பெண் மற்றும் அவரது மகனை காவல்துறையினர் மீட்டனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த குழந்தைகள் நல குழு உறுப்பினர் உஷா, “கொரோனா பயம் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக தனது மனைவியும் மகனும் ஒரே குடியிருப்பில் அடைந்திருந்ததாக கணவர் புகார் அளித்திருந்தார்.

வேலை காரணமாக தான் வெளியூர் செல்வதால் தன்னை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்றும் அவர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் மளிகை பொருட்களை வாங்கி கொடுத்து வருகிறேன் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். புகாரின் அடிப்படையில் களத்தில் இறங்கிய காவல்துறையினர் தாயையும் மகனையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று குழந்தைகள் நல குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.