
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு வாரிசு பட சூட்டிங்கில் விஜய் உடன் எடுத்த வீடியோவை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் நடிகர் விஜய் COOL-ஆக டிரைவ் பண்ண நடிகர் யோகி பாபு உள்ளிட்ட படகுழுவினர் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
— Yogi Babu (@iYogiBabu) January 28, 2023