
பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி மக்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து அதன் தலைவராக இருந்து வரும் ராஜேஸ்வரி பிரியா, அன்னையில் வெளியான நடிகர் விஜயின் லியோ படப்பாடலான நான் ரெடி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் குறித்து விமர்சனம் செய்திருந்தார். நடிகர் விஜய்யை சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட பலரும் பின்பற்றுகிறார்கள். எனவே இது அவர்களை கெடுத்து விடும்.
எனவே நான் ரெடி பாடலில் இடம்பெற்றுள்ள மதுவை ஊக்குவிக்கும், குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் வரிகளை நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த பேட்டி சமூக ஊடகங்களில் பலரும் பார்த்த நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆபாசமாக திட்டுகிறார்கள், ஆபாசமாக பேசுகிறார்கள். அனைவரும் விஜய்யை டேக் செய்து என்னை திட்டுவதால், நடிகர் விஜய் இவர்களுக்கு பணம் கொடுத்து என்னை திட்ட சொல்கிறார்.
எனவே விஜய்யையும், இவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று டிஜிபியிடம் புகார் கொடுத்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பு வாக்குவாதத்தில் முடிந்தது.
செய்தியாளர்கள்: நடவடிக்கை எடுங்க என சொல்லலாம். கைது பண்ணி நடவடிக்கை எடுக்க சொல்லுறீங்க என்ற கேள்விக்கு…
ராஜேஸ்வரி பிரியா: என்ன சொல்லாதீங்க சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கா ? இடம் இருக்கு. அசிங்கமாக திட்டுனவுங்க மேலையும் கம்பளைண்ட் கொடுத்தாச்சி.
செய்தியாளர்கள்: உங்கள பத்தி ஒருத்தர் பேசுனா மீடியாவில் வராது, விஜய் பத்தி நீங்க பேசும் போது எல்லாரும் வந்து எடுத்துப்பாங்க என்ற கேள்விக்கு….
ராஜேஸ்வரி பிரியா: உங்க கேள்வில எதாவது லாஜிக் இருக்கா ? – என ஆவேசமாக பேச..
செய்தியாளர்கள்: உங்க கேள்வில எதாவது லாஜிக் இருக்கா ? என பதில் கேள்வி கேட்க…
ராஜேஸ்வரி பிரியா: லாஜிக் இருக்கு என்றார்.
செய்தியாளர்கள்: நடவடிக்கை எடுக்கலாம் சொல்லுங்க, அது என்ன ? விஜய்யை கைது பண்ணனும் அப்படின்னா…. வேற எந்த நடிகருமே பண்றது இல்லையா எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து மது பழக்கம் உண்டு, சிவாஜி சார் காலத்துல இருந்து மது பழக்கம் உண்டு புரியுதுங்களா ?
ராஜேஸ்வரி பிரியா: அத சட்டம் முடிவு எடுக்கட்டும். நீங்க இதை செய்யலாமா ? இதை செய்யக் கூடாதா ? என்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? இவரு மனித உரிமையை மீறி கேள்வி கேக்கறாரு. பத்திரிக்கையாளர்களுக்கு எல்லாம் நாங்க பதில் சொல்லிட்டு இருக்கோம்.
செய்தியாளர்கள்: ஆதாரத்தை காட்டுங்க மேம்,
செய்தியாளர்கள்: நடிகர் விஜய் தான் காசு குடுத்து, எல்லாத்தையும் போட சொன்னாருன்னு சொன்னதுக்கு உங்ககிட்ட என்ன ஆதாரம் இருக்கு ?
ராஜேஸ்வரி பிரியா: அந்த ஆதாரங்களை திரட்டுவதற்காகத் தான் கைது பண்ண சொல்லுறேன். எங்கிட்ட இருக்குற ஆதாரத்தை கொடுத்துட்டேன், உங்ககிட்டையும் கொடுக்குறேன்…
செய்தியாளர்கள்: நடிகர் விஜய் தான் அவருடைய ரசிகர்கள் கிட்ட காசு குடுத்து, நீங்க பெண்கள திட்டுங்க என சொன்னாரா ?
ராஜேஸ்வரி பிரியா: விஜய் ரசிகர் மன்றத்துல இருந்து ஒருத்தரு என் வீட்டை முற்றுகை இட்ருவேன் என சொன்னாரு. உங்களுக்கு என்ன ஆதாரம் வேணும்னாலும் நான் அனுப்புறேன் .
செய்தியாளர்கள்: நடிகர் விஜய் சார் பேசுனா ஆடியோ வேணும். அவங்க ரசிகர் கிட்ட பேசுனாங்க என சொன்னிங்கள, அது வேணும்.
ராஜேஸ்வரி பிரியா: அந்த ஆடியோவ எடுக்குறதுக்காக தான் கம்பளைண்ட் குடுத்து இருக்கேன் சகோதரரே .. அத கண்டு பிடிக்கட்டும், அதுக்குத்தாங்க போலீஸ்ல கம்பளைண்ட் குடுப்பாங்க. ஏங்க ,விவரமே இல்லாம பேசுறாரு… விவரமே இல்லாம பேச கூடாது. ஒரு விஷயத்த சந்தேகிச்சி கம்பளைண்ட் கொடுக்குறது என்னோட உரிமை. அது உண்மையானு ஆய்வு செய்வதற்குத்தான் குடுத்து இருக்கோம் புரியுதா ? உங்க கேள்விலேயே அர்த்தம் இல்ல…
செய்தியாளர்கள்: நீங்க எடுத்ததுமே அரெஸ்ட் பண்ணுங்கன்னு கொடுக்குறது சரியா ?
ராஜேஸ்வரி பிரியா: ஆமா ,அப்படித்தான் சொல்லுவோங்க… எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்குல. உங்க அக்கா தங்கச்சிய அப்படி பேசுனா ஏத்துப்பீங்களா ?
செய்தியாளர்கள்: அதுலாம் நீங்க பேச கூடாது?
ராஜேஸ்வரி பிரியா: என்ன பேசாதீங்க . பெர்சனலா ? பெர்சனலானா ?
ராஜேஸ்வரி பிரியா: ரசிகர் மன்றத்துல ஒருத்தர்னு சொல்லி, என்ன கொளுத்திடுவேன்னு சொல்லுறான். அப்போ கம்பளைண்ட் கொடுக்கலாமா ? இல்லையா ?
செய்தியாளர்கள்: அப்போ நீங்க யாருனு கண்டு பிடிக்க சொல்லுங்க? அத கேட்ட பெர்சனலா சொல்லறீங்க ..?
ராஜேஸ்வரி பிரியா: அதையும் சேர்த்து தாங்க கொடுக்குறோம். நீங்க கேள்வி கேக்குறத ஒழுங்கா கேளுங்க.
செய்தியாளர்கள்: விஜய் சார் மட்டும் தான் பண்ணுறாரா ? எம்.ஜி.ஆர் சார் பண்ணலயா ? சிவாஜி சார் பண்ணலயா ?
ராஜேஸ்வரி பிரியா: எம்.ஜி.ஆர் அவர்கள் பண்ணல… நா அந்த தலைமுறை இல்ல. .நா பொறந்த வருஷம் 1982. அதுக்கு அப்பறம் இப்போதா நான் போராட முடியும் என செய்தியாளர் சந்திப்பு வாக்குவதத்துடன் முடிந்தது.