இன்றையகால படித்த இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களில் அடிமையாகி விடுகின்றனர். அதனால் அவர்களது வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைகிறது. அதேபோன்று சமீபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட பண இழப்பை ஈடு செய்ய திருடனாக மாறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமெக்காவை சேர்ந்த கே.ஏ. மூர்த்தி (27) என்பவர் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மூர்த்தி பலர் லட்ச ரூபாயை இழந்துள்ளார்.

அதனால் கடனாளியான அவரை அவரது பெற்றோர்கள் சொத்துக்களை வித்து கடனை அடைத்து மீட்டனர். இருப்பினும் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட பண நெருக்கடி காரணமாக மூர்த்தி திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபாஷ் நகரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலிற்கு வந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடி உள்ளார்.

அந்தப் பெண் அளித்த புகாரின் படி சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த காவல்துறையினர் அந்த குற்றவாளி மூர்த்தி தான் என்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் பணத்தை இழந்ததாகவும் அதனால் திருட்டு தொழில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் மீது ஏற்கனவே சில வீடு புகுந்து திருடிய வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்த ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான 245 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன. இச்சம்பவம் ஆன்லைன் விளையாட்டுக்களால் படிப்பு, குடும்பம், வாழ்க்கையை அனைத்தும் கெட்டு விடுகிறது என்பதை எடுத்துக்காட்டு விதமாக உள்ளது