
அமெரிக்கா அதிபரான டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு, ஸ்மார்ட் போன், கணினி, செமி கண்டக்டர் சிக்கல் உள்ளிட்ட 20 மின்னணு உபகரணங்களுக்கு பரஸ்பர வரிவிதிப்பில் இருந்து முழு விலக்கு அளித்துள்ளது. ட்ரம்பின் இந்த அறிவிப்பால் சீனாவில் இருந்து உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்யும் ஆப்பிள், Nvidia உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் நிம்மதி அடைந்துள்ளன.
குறிப்பாக ஆசியாவில் உள்ள சிப் தயாரிப்பாளர்களான தைவான், தென் கொரியா செமி கண்டக்டர் நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஆப்பிள் ஐபோன்கள் விலையேற்றம் தடுக்கப்பட்டுள்ளது. ஐபோன்களை தயாரித்தல், ஒன்றிணைத்தல் பணி 90 சதவீதம் சீனாவில் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.