
தென்னிந்திய முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் குபேரா. அந்தப் படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். அமிக்கோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுனில் நராங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் இப்படத்தில் நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தானா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடைபெற்றுள்ளனர்.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 100 கோடி வசூலித்துள்ளதாக பட குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் விமர்சையாக நடைபெற்றது. மேலும் இத்திரைப்படம் விறுவிறுப்பான சமூக திரைப்படமாக உள்ளதாக ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இத்திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் தனுஷின் 51 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.