போதை பொருள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்குவது மட்டுமல்லாது அவர்களது வாழ்வையும் சீர்குலைத்து விடுகின்றது. மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட போதை பொருளை பயன் படுத்துவதால் அது அவர்களது வாழ்வையே கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றது.

ஆகவே அவ்வாறு போதை பொருள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென் மாநில காவல்துறை இயக்குனர்கள் மாநாட்டில் பேசிய அவர் போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை தடுக்க காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் மிகப்பெரிய பிரச்சனை என்றும் அதனை தடுப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும் என்றும் கூறியுள்ளார். அதனைப் போன்று போதை விற்பனையைக் கூட தடுக்க முடியும் என்றும் கூறிய அவர் இதனை தடுக்க முடியாது. இது பொது அமைதியை சீர்குலைக்கும் என்றும் கூறியுள்ளார். அதோடு இதனை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.