முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இது பற்றி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விரைந்து நலம்பெற்று, மக்கள் பணிகளைத் தொடர வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்