தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி என்று  நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும்,  நிலை உணர்ந்து கருணை காட்டியும்,  நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும்,  மக்களை பேணி காப்பதே ஒரு அரசுக்கு புகழொளி சேர்ப்பதாகும். இது ஐயன் வள்ளுவன்  உடைய குறள்..

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்கிற  தேர்தல் வாக்குறுதிகளிலே இங்கே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் ஒரு 28 மாதங்கள் தொடர்ந்து,  இதே அவையிலே அனைத்து கட்சி உறுப்பினர்களும்,  மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி….  இன்றைக்கு அது அறிவிக்கபட்டு செயலாக்த்திற்கு வந்து இருக்கிறது.

அதிலே இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் வட்டாச்சியர் அலுவலகத்திலும், கோட்டாட்சியர் அலுவலகத்திலும், செல்போன்களை வைத்துக்கொண்டு குடும்ப தலைவிகள் ஒரு கையிலே குழந்தை… ஒரு கையிலே செல்போனை   வைத்து கொண்டு… எங்களுக்கு குறுந்தகவல்… இந்த மெசேஜ் இன்னும் வரவில்லை. ஆக குடும்ப தலைவிகளை தகுதி உடைய குடும்ப தலைவியாக தேர்ந்தெடுக்கிற டேட்டா,  அந்த தரவு ஒரு செய்தி குறிப்பாக நான் அறிகிறேன்.

2 கோடியே 20 லட்சம் மனுக்கள் விநியோகிக்கப்பட்டதாகவும்,  அதிலே ஒரு கோடி மனுக்கள் தகுதி உள்ளதாக ஏற்றுக்கொள்ள பட்டதாகவும்,  59 லட்ச மனுக்கள் அரசால் தகுதி இல்லையென்று தள்ளுபடி செய்யப்பட்டதாகவும்,  அதற்கு வருமான உச்ச வரம்பு,  கார் வைத்திருப்பது, 5 ஏக்கர் நஞ்சை – புஞ்சை என்று வரம்புகள், நிபந்தனைகள்,  விதிமுறைகள் வகுக்க பட்டிருக்கிறது.

அரசு எந்த தரவுகள் அடிப்படையிலே வகுத்தார்கள் என்று தெரியாது.  .மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதை அறிவிக்கின்ற பொழுது…  சாமானிய மக்கள் – ஏழை எளிய மக்கள் – விளிம்பு நிலை மக்கள்  அனைவருக்குமே வழங்குவோம் என்று சொன்னார்கள். ஆனால் நடைமுறையிலே வசதி படைத்த தலைவர்கள் பெற்றிருப்பதாகவும்,  ஏழை – எளிய சாமானிய மக்கள் விடுபட்டு இருப்பதாக பேசினார்.