தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக 5 தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கான முதலீடுகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சிங்கப்பூர், லண்டன் உள்ளிட நாடுகளுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

மே மூன்றாம் வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு செல்வார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஜூன் 3-ம் தேதி கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுதல், கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு குடியரசு தலைவர் வருகை, மதுரையில் கலைஞர் நூலகம் திறப்பு விழா போன்றவைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நிதிநிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கையின் போது அமைச்சர்களால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதும் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.