
சென்னை மாநகராட்சியின் ரூ. 200 கோடி மதிப்பிலான நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடுகின்றனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, பொறுப்பான, திறன்மிக்க நிதி மேலாண்மையால் தமிழ்நாட்டின் நிதிநிலையைச் சீர்செய்து வரும் திராவிட மாடல் அரசின் புதுமுயற்சியாக, சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகின்றன.
இதனால் கடனுக்கான வட்டி செலுத்துவது குறைந்து, மழைநீர் வடிகால் உள்ளிட்ட இன்றியமையாத உட்கட்டமைப்புப் பணிகளுக்கான நிதி திரட்டப்படும்! மாநகராட்சியின் நிதிநிலை மேம்படும்! என்று கூறினார்.