
சென்னை நந்தனம் YMCA என்ற மைதானத்தில் புத்தகக் கண்காட்சி விழா நடைபெற்று வருகிறது. இது 48-வது புத்தக கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதோடு அரங்கத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
இந்த கண்காட்சிக்கு தினமும் 1000-கணக்கான மக்கள் வந்து புத்தகம் வாங்குகின்றனர். இந்நிலையில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கில் உள்ள பல்வேறு புத்தகங்களை தவெக கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் புத்தகங்களை தானம் செய்தார்.