
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமெரிக்க பயணம் வெற்றி கரமாக முடிவடைந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக அதிமுகவினர் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்ற போது 10 சதவீத முதலீடு கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்கவில்லை கூறினார். அதன் பிறகு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் நிச்சயமாக, உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும் என்றார்.
திமுக சொன்னதை தான் செய்யும். செய்ததைதான் சொல்லும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் நீங்கள் எதிர்பார்ப்பது போன்று நல்ல முடிவு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை மாற்றம் குறித்த பதிலுக்கு சூசகமாக பதில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பதிலிலிருந்து தெரியவந்துள்ளதால் அமைச்சர்கள் மத்தியில் களக்கம் நிலவுகிறது.