
ஐசிசி சாம்பியன்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளது. இது பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணத்தினால் இந்தியா அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தது. இதனால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் உள்ள லோகோவுடன் இருக்கும் என்றும் அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை பிசிசிஐயை மறுத்துள்ளது. இது குறித்து பிசிசிஐ புதிய செயலாளர் தேவஜித் சைகியா கூறியதாவது, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜெர்சி தொடர்பாக ஐசிசி என்ன விதியை கொண்டு வருகிறதோ, அதை நாங்கள் பின்பற்றுவோம். லோகோ மற்றும் ஜெர்சி விவகாரத்தில் மற்ற அணிகள் எதை செய்கிறதோ அதை நாங்களும் கடைபிடிப்போம் என்று கூறியுள்ளனர்.