
உபேர் மற்றும் ஓலா போன்ற பைக் டாக்ஸி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது. இந்த போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்கள் தங்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு வந்தது.
இதையடுத்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி சமூக வலைதளங்களில் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கூறியதாவது, வாடிக்கையாளரின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோன்களில் பதிவு செய்யும் போது வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உபேர் மற்றும் ஓலா நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்றும் பதிவிட்டுள்ளார்.