ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் டிரைவர் இல்லாமல் திடீரென சாலையில் ஓடிய காரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த நிகழ்வில், கார் தானாகவே சாலையில் நகர்ந்து சென்றது. இதனை கண்டு அங்கு இருந்த பொதுமக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில் ஏசியில் இருந்து புகை வந்தபோது டிரைவர் பானட்டை திறந்து பார்த்த போது கார் இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது என்று கூறப்படுகிறது.

இந்த தீவிபத்தினால் கார் ஹேண்ட் பிரேக் செயலிழந்து கார் நகர்ந்து சென்றது. இதனால் சாலையில் இருந்தவர்கள் பெரும் அச்சத்துடன் ஓடினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி, சமூக வலைதளங்களில் பலர் இதுகுறித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.