உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனில், போலீஸ் ஹெட்கான்ஸ்டபிளாக இருப்பதாக கூறிய ஒருவர் பிக்கப் வாகன ஓட்டுநரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோஹ்ரி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்றவர் ஜாகன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இந்தச் சம்பவம் ஏப்ரல் 30ஆம் தேதி நடந்தது எனத் தெரியவந்துள்ளது.

சிமெண்ட் மற்றும் மண் ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனத்தை சாலையோரம் நின்றுகொண்டிருந்த போது, அங்கிருந்து வந்த கார், பிக்கப் வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. தகராறு ஏற்பட்டவுடன் காரில் இருந்து ஒருவர் கீழே இறங்கி, தன்னை அர்ஜுன் எனவும் போலீசில் ஹெட் கான்ஸ்டபிளாக இருப்பதாகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

அதற்குப் பிறகு, எந்தவொரு காரணமுமின்றி, பிக்கப் வாகன ஓட்டுநரான ஆகாஷைக் கடுமையாக கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. அருகிலிருந்த பொதுமக்கள் சமாதானம் செய்ய முயன்ற போது, அவர் அவர்களையும் தாக்க முயன்றுள்ளார்.

காரில் இருந்த ஒரு பெண்ணும் வெளியே வந்து தனது செருப்பை எடுத்து உடனடியாக சண்டையில் ஈடுபட்ட காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளன.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தாக்குதலுக்குள்ளான ஆகாஷ், அந்த ஹெட் கான்ஸ்டபிள்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும், குற்றவாளி போலீஸ் என்றாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.