இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டெஸ்ட் தொடர் போட்டி ஆஸ்திரேலியா மெல்போன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரின் 5ஆவது நாள் ஆட்டம் ரசிகர் மத்தியில் அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் 270 ரன்களுக்கு மேல் எந்தப் போட்டியும் நடைபெற்றது இல்லை. இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணி 330 ரன்கள் முன்னிலையுடன் போட்டியில் உள்ளது.

இதனை இந்திய அணி நாளைய ஆட்டத்தில் முறியடிக்குமா? அல்லது டிரா செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதேபோன்று இந்தப் போட்டி கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு மிக முக்கியமான போட்டியாக அமையும். இதைத் தொடர்ந்து 4ஆவது நாள் போட்டியில் லபுஷன் எளிய கேட்ச் ஒன்றை யஷஸ்வி ஜெய்ஸ்வாலை நோக்கி கொடுத்தார். ஆனால் அதனை ஜெய்ஸ்வால் கோட்டை விட்டார். இதனால் அருகில் நின்ற கேப்டன் அனைவரது முன்னிலையிலும் கோபத்தை வெளிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து பல கிரிக்கெட் வீரர்களும் இதனை விமர்சித்து வரும் நிலையில் தி வேஸ்ட் ஆஸ்திரேலியா பத்திரிக்கை ரோகித் சர்மாவை விமர்சித்துள்ளது.”captain cry baby” என்ற தலைப்போடு ரோஹித் சர்மாவின் புகைப்படத்தில் அவரது வாயில் குழந்தை பயன்படுத்தும் நிப்பிலை வைத்து கண்ணீரில் கதறுவது போல் விமர்சிக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டது.

இதே போன்று ஏற்கனவே விராட் கோலியை கோமாளி போல சித்தரித்து. அவரது மூக்கில் ஜோக்கர் மூக்கு போல் மாற்றி அவமானப்படுத்தி உள்ளது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் ஆஸ்திரேலிய பத்திரிக்கை குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்திய வீரர்களை விமர்சனம் செய்து விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என பலரும் தங்களது கோபத்தை கருத்துக்களாக தெரிவித்து வருகின்றனர்.