இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இது 5 போட்டிகள் கொண்ட தொடராகும். இதில் இந்திய அணியின் சார்பாக ரோகித் சர்மாவா கேப்டனாக பதவி வகிக்கிறார் துணை கேப்டன் ஆக பும்ரா பதவி வகிக்கிறார். திடீரென ரோகித் சர்மா குறித்து முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதாவது ஆஸ்திரேலியா- இந்தியா டெஸ்ட் தொடர் கிரிக்கெட்டில்  இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தனது தனிப்பட்ட விஷயங்களுக்காக போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

எனவும், இதனால் ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக பதவியேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. ராகுல், அபிமன்யு ஆரம்ப நிலை ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.