சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே கார்த்திகை திருநாளை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை இராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கேற்றது.

பெரிய மாட்டிற்கு 8 மைல் தூரமும் சின்ன மாட்டிற்கு 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரம் சாமி குமாரின் மாட்டு வண்டிகள் முதலாவதும், சிவகங்கை மாவட்டம் சேர்ந்த பழனிச்சாமி மாட்டு வண்டிகள் இரண்டாவதும், புதுக்கோட்டையை சேர்ந்த சேர்வை இரண்டாவதும், சிவகங்கை சேர்ந்த வெங்கடாசலம் மாட்டு வண்டிகள் நான்காவது இடமும் பிடித்தது.

இந்த பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டின் உரிமையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி பெற்ற மாடுகளுக்கு வேட்டி மாலையும் அணிவித்து மரியாதை செலுத்தி மாட்டின் உரிமையாளர்களுக்கு கோப்பையும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த பந்தயத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.